ஜெனிலியா - ரிதேஷ் ஜோடிக்கு அடுத்த ஆண்டு கல்யாணம்!

விரைவில் திருமணம் செய்யப்போவதை உறுதி செய்துள்ள ஜெனிலியா - ரிதேஷ் காதல் ஜோடிக்கு பாலிவுட்டில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இந்தியிலும் நடித்து வருபவர் ஜெனிலியா. இந்தி ஹீரோ ரிதேஷ் தேஷ்முக்கும் இவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதுபற்றி கிசுகிசுக்கள் வெளியானபோது தொடர்ந்து மறுத்து வந்தனர். இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக கிசுகிசு பரவியது. இதையடுத்து ரிதேஷ் தேஷ்முக் சமீபத்தில் தங்கள் காதலை உறுதி செய்தார்.

-

-



‘இருவீட்டார் சம்மதத்துடன் அடுத்த வருடம் எங்களது திருமணம் நடக்கும்’ என்றார். இந்த காதல் ஜோடிக்கு பாலிவுட் ஸ்டார்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஹீரோயின் லாரா தத்தா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரிதேஷ், ஜெனிலியா பொருத்தமான ஜோடி. என் நெருங்கிய நண்பர்களான இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். தியா மிஸ்ரா உள்பல பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!