திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்: மம்தா

‘திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன்’ என்று நடிகை மம்தா கூறினார். ‘சிவப்பதிகாரம்’ படத்தில் நடித்தவர் மம்தா மோகன்தாஸ். தற்போது ‘தடையற தாக்க’ படம் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் நீண்ட நாள் காதலன் பிரிஜித் கர்தாவுக்கும் கடந்த 11-ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த வாரத்தில் திருமணம் நடக்க உள்ளது. இதுபற்றி மம்தா கூறியதாவது: இருவரது குடும்பமும் 15 வருடங்களாக நட்புடன் பழகுகிறோம். ஆனால், கடந்த 3 மாதம் முன்புதான் பிரிஜித்துடன் காதல் மலர்ந்தது. பஹ்ரைனில் இருந்து வந்த அவர் என்னிடம் காதலை தெரிவித்தார். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். என் திறமையை கட்டிப்போட அவருக்கு விருப்பம் இல்லை. தொடர்ந்து நடிக்க கிரீன் சிக்னல் தந்துவிட்டார். எனவே, திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன். இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.
TamilMirror.lk –  Sri Lanka 24 Hours Online Breaking News in Tamil Language: News, Politics, Video, Finance, Business, Sports,  Horoscope .
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!