அழகியின் நிர்வாண போட்டோ ரூ.13 லட்சத்துக்கு ஏலம்

இங்கிலாந்து மாடல் அழகி கேத் மோஸ் 18 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோ ரூ.13 லட்சத்துக்கு ஏலம் போனது. இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி கேத் மோஸ் (37). 14 வயதில் இருந்து மாடலிங் செய்கிறார். தற்போது பேஷன் டிசைனிங்கும் செய்கிறார். இதுதவிர மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம், போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வு, புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்டுவது போன்ற சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்..

-



ஜெர்மனியில் வெளியாகும் ‘வோக்’ பேஷன் புத்தகத்தின் 1993-ம் ஆண்டு ஜனவரி இதழுக்காக கேத் மோஸ் நிர்வாண போஸ் கொடுத்தார். மாடலிங் உலகில் அவர் உச்சத்தில் இருந்த நேரம் அது. 19 வயதில் அவர் நிர்வாண போஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தினாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆல்பர்ட் வாட்சன் என்ற போட்டோகிராபர் எடுத்த இந்த படம், லண்டனின் போன்ஹம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அந்த போட்டோ ரூ.13 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!