தளபதி தீபன் மீது நச்சுக்குண்டு தாக்குதல் : புதிய ஆதாரங்கள்! (Video & pics)

2009ம் ஆண்டு போர் உக்கிரமடைந்த நிலையில், ஏப்பிரல் மாதம் அளவில் ஆனந்தபுரத்தில் கடும் சமர் இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. ஆனந்த புரத்தில் தேசியதலைவர் தங்கும் ஒரு இரகசிய இடத்தை இலங்கைப் படையினர் சுற்றிவளைத்து பெட்டியடித்தனர். சுமார் 4,000 விசேட அதிரடிப்படையிர் களமிறக்கப்பட்டு இத் தாக்குதல் வியூகம் வகுக்கப்பட்டது.

தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளான் பகுதிநோக்கி நகர முயன்றனர். இதற்காக சுமார் 1000 விடுதலைப் புலிகள் 4,000 இராணுவத்தினரை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்டனர். இத் தாக்குதலானது உலகில் எங்கும் இதுவரை எந்த ஒரு விடுதலை அமைப்பும் மேற்கொள்ளாத கடும் தாக்குதலாக அமைந்தது. விசேட அதிரடிப்படையினர் நூற்றுக்கணக்கில் இறந்தனர்.

ஒரு சிறிய இடத்தை பெரும் இராணுவப்படையால் கைப்பற்ற முடியாத நிலை தோன்றியது. களத்தில் பிரிகேடியர் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுசா, கேணல் துர்க்கா ஆகியோர் நிற்பதை இராணுவத்தினர் புலிகளின் உரையாடலை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறிந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் அங்கே நின்றால் இராணுவத்தால் 1 அங்குலம் கூட முன்னேற முடியாது என்பது இராணுவத்துக்கு நன்கு தெரியும். இதேவேளை இராணுவத்தினர் திடீரென 1 கிலேமீட்டார் பின் நோக்கி நகர்த்தப்பட்டனர். இது ஏன் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால் சற்று நேரத்தில் அப்பகுதிக்கு, நச்சுவாயுக் குண்டுகளும், எரிக்கும் பொஸ்பரஸ் குண்டுகளும் வந்து விழுந்தது.

புலிகளுடன் போரிட்டு வெல்லமுடியாத இராணுவம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை அவ்விடத்துக்கு ஏவியது. இதனால் பல போராளிகளும் தளபதிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர். நச்சுவாயுக் குண்டுகளையும், ஆட்களை மயங்கவைக்கும் குண்டுகளையும் பாவித்து இராணுவம் செய்த அட்டூழியங்கள் பல. இவ்வாறு ஏவப்பட்ட நச்சுக்குண்டால் பிரிகேடியர் தீபன் அவர்கள் உருக்குப் போராடிக்கொண்டு இருந்தார். இதனை அறிந்த இராணுவம் அவரை உயிருடன் பிடிக்க, தற்காலிக சிகிச்சை கூடக் கொடுத்துள்ளது. [படத்தில அதனைக் காணலாம்.]


ஆனந்தபுரத்தில் அதிரும் போர் புரிந்து வீரகாவியமாகிய தளபதிகள், போராளிகள், அனைவருக்கும் அதிர்வு இணையம் தனது வீரவணக்கத்தை செலுத்தி நிற்கிறது...
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!