காற்சட்டைப் பையிலிருந்த கையடக்கத்தொலைபேசி தீப்பற்றியது

வாங்கி மூன்று வார காலமான கையடக்கத் தொலைபேசியின் பற்றறி காற்சட்டைப் பையிலிருந்த நிலையில் உருகி தீப்பற்றி எரிந்ததால் நபரொருவர் எரிகாயங்களுக்கு உள்ளான சம்பவம் தென் வேல்ஸிலுள்ள பெனார்த் எனும் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

மைக்கேல் ரெய்லர் என்ற மேற்படி நபரின் காற்சட்டையிலிருந்து ஆரம்பத்தில் புகை வெளிப்பட்டுள்ளது. அவர் என்ன நடந்தது ஏது நடந்தது என சிந்திப்பதற்குள் காற்சட்டை தீப் பிடித்து எரிந்துள்ளது. இந்நிலையில் எரிகாயத்துக்கு உள்ளான மைக்கேல் ரெய்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!