2020 இல் பூமிக்குக் காத்திருக்கும் ஆபத்து!: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பூமிக்கு ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் விஞ்ஞானிகள் பலமுறை எச்சரித்துள்ளனர். இவற்றில் சில அவர்களின் கணிப்பின் படி நடந்துள்ளதுடன், பல நடக்காமலும் போயுள்ளன.
எனினும் இத்தகைய எதிர்வுகூறல்கள் லேசான பயத்தை நிச்சயமாக வரவழைக்கக் கூடியன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டில் பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தொன்று தொடர்பில் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், 2020 ஆம் ஆண்டு பூமியை சூரியப் புயல் தாக்கலாம் எனவும், இதற்கான வாய்ப்பு 8 இல் 1 ஆகக் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஏற்படும் பாதிப்பினால் பல ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு நட்டமேற்படுமெனவும், இதில் இருந்து மீள எமக்கு ஒரு தசாப்பதத்துக்கு மேல் தேவைப்படுமெனவும் குறிப்பிடுகின்றனர். இதே போன்ற புயலொன்று சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பூமியைத் தாக்கியுள்ளது. இதன்போது தந்தி நிலையங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அவற்றின் வலையமைப்பும் பாதிக்கப்பட்டன.

இன்றைய இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உலகில் அத்தகையதொரு புயல் தாக்குமாயின் அதன் விளைவுகள் முன்னரை விடப் பல மடங்கு மோசமாக இருக்குமென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது மின் சக்தி, வானொலி தொடர்பாடல், ஜி.பி.எஸ் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் பாரிய பாதிப்பை உண்டாக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதற்கு முன்னர் இடம்பெற்ற அனர்த்தங்களின் காலவரையறைகளை ஒப்பிட்டே இம்முடிவை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!