விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி கேணல் பதுமனை பூசா தடுப்பு முகாமுக்கு மாற்ற திருகோணமலை மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த கேணல் பதுமன் என அழைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் வரதநாதன், சிறிலங்கா காவல்துறையினரால் திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீதான குற்றப்பத்திரிகை இன்னமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், தடுப்புக்காவல் உத்தரவு மாதாந்தம் நீடிக்கப்பட்டு வந்தது. இவருக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்காக பூசா தடுப்பு முகாமுக்கு மாற்ற, தீவிரவாத முறியடிப்பு காவல்துறையினர் நீதிமன்ற அனுமதி கோரியிருந்தனர்.
இதையடுத்து திருமலை மேல்நீதிமன்ற நீதிபதி கேமா ரணவீர, பதுமனை பூசா தடுப்பு முகாமக்கு மாற்றுமாறும், மே 2ம் நாள் அவரை மீண்டும் நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் உத்தரவிட்டார்.