அமெரிக்கா பெண்கள் நீச்சலுடையில் புதிய சாதனை! (video)

அமெரிக்காவில் நடைபெற்ற நீச்சலுடை அணி வகுப்பு நிகழ்வொன்றில் 450 பெண்கள் கலந்துகொண்டு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பனாமா சிட்டி கடற்கரையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நீச்சலுடை அணிந்த 357 பெண்கள் ஒன்றுகூடி முன்னர் சாதனை நிலைநாட்டியிருந்தனர். இப்போது 450 பேர் இணைந்து அச்சாதனையை முறியடித்துள்ளனர்.
இவ் அணிவகுப்பு நிகழ்வில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெண்கள் ஒன்று கூடி சுமார் ஒரு மைல் தூரம் அணிவகுப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது ஒவ்வொருநாளும் பார்க்கக்கூடிய ஒரு விடயமல்ல இந்த அணிவகுப்பு சாதனையை நம்ப முடியாமல் உள்ளது என கின்னஸ் உலக சாதனை பதிவுகளின் தீர்ப்பாளரான பிலிப் ரொபர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!