சீன பயிற்சியாளரிடம் குங்பூ கராத்தே கற்கிறார் அனுஷ்கா

சீன பயிற்சியாளரிடம் குங்பூ கராத்தே கற்கிறார் அனுஷ்கா. புதிய படத்துக்காக சீன பயிற்சியாளரிடம் குங்பூ, கராத்தே பயிற்சி பெறுகிறார் அனுஷ்கா. செல்வராகவன் இயக்கும் படம் ‘இரண்டாம் உலகம்". ஆர்யா ஹீரோ. நகரத்துபெண், மலைவாழ் பெண் என மாறுபட்ட இரு வேடங்களில் அனுஷ்கா நடிக்கிறார். மலைவாழ் பெண் வேடத்தில் வரும் அனுஷ்காவுக்கு கராத்தே, குங்பூ கலைகளில் தேர்ச்சி பெற்றவர் போன்ற பாத்திரம் அமைந்துள்ளது.
இதையடுத்து அதற்கான பயிற்சி பெறுகிறார். சீன படங்களில் சண்டை பயிற்சி அளித்த ஸ்டன்ட் மாஸ்டர் இதற்காக வரவழைக்கப்படுகிறார். ஏற்கனவே தெலுங்கில் ‘பில்லா" படத்துக்காக அனுஷ்கா இத்தகைய பயிற்சி பெற்றிருக்கிறார். மேலும் ‘அருந்ததி" படத்தில் வில்லன் நடிகர் சோனு சூட்டுடன் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார்.

"பஞ்சமுகி" படத்தில் இரட்டை வேடத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்திருந்தாலும் இந்த படத்தில் அவரது வேடத்தை புதுமையாக சித்தரிக்க முடிவு செய்து செல்வராகவன் சரித்திர பின்னணியையும் இக்கதையில் இணைத்திருக்கிறார். இதன் ஷூட்டிங் அமெரிக்காவில் நடத்த லொகேஷன் தேர்வு நடக்கிறது. "கதைப்படி பீரியட் படமாக இது தெரிந்தாலும் ஆனால் அத்தகைய படமாக இது இருக்காது. ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரமாண்ட முறையில் படமாகிறது" என "இரண்டாம் உலகம்" யூனிட் தெரிவித்தது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!