இந்தியாவில் மஹிந்தவுக்கு செருப்படி : காந்தி சிலை உடைப்பின் எதிரொலி!

இலங்கையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு, சென்னையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவ பொம்மைக்கு பொதுமக்கள் செருப்பால் அடித்து தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

இலங்கை மட்டக்களப்பில் உள்ள பூங்காவில் காந்தியின் சிலையை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தியதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி கூட் ரோட்டில் தனி ஆளாக திடீரென சாலை மறியலில் உட்கார்ந்தார். பொலிஸார் இவரை அப்புறப்படுத்தினர்.

பின், மாலை 6.30 மணிக்கு திடீரென காந்தி சிலையை சேதம் பண்ணியமை தொடர்பாக இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசே கண்டனம் தெரிவி, என்ற பேனருடன், ராஜபக்ச உருவ பொம்மையை கயிற்றில் கட்டி, காந்தி பஜார் வழியாக இழுத்து வந்தார்.

செஞ்சி கூட்ரோட்டிற்கு வந்ததும் உருவ பொம்மையுடன் மறியல் செய்ய முயன்றார். பொதுமக்கள் சிலர் ராஜபக்ச உருவ பொம்மையை செருப்பால் அடித்தனர்.

இதற்குள் அங்கு வந்த பொலிஸார் கிருஷ்ணமூர்த்தியை செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கட்டி இழுத்து வந்த உருவ பொம்மையை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!