சுனாமியால் உயிரிழந்தவர்கள் பேயாக நடமாட்டம்: ஜப்பானில் பீதி

ஜப்பானில் கடந்தாண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்ததில் 19 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் புகுஷிமா அணு உலை வெடித்ததில் கதிர்வீச்சு பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தற்போது சிறிது சிறிதாக அணு உலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் பேயாக மாறி பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக இஷினோமகி நகரில் கடும் பீதி நிலவுகிறது.

இறந்தவர்களின் சத்தங்கள் மற்றும் அலறல்கள் கேட்பதாக பலரும் கூறி வருவதால், மக்கள் சாலையில் நடமாட அஞ்சுகின்றனர். இதனிடையே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியான நபர்களின் ஆன்மா சாந்தியடைய பரிகார பூஜைகளை செய்வதில் மதகுருமார்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!