15 ஆண்டுகளாக கோழிக்கறி மட்டுமே சாப்பிடும் சிறுமி

லண்டனின் பிர்மிங்காம் பகுதியைச் சேர்ந்தவள் ஸ்டேசி இர்வின். தற்போது 17 வயதாகும் இவள் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் லேபராக வேலை பார்த்து வருகிறாள். இவள் கடந்த 15 ஆண்டுகளாக கோழிக்கறியை மட்டுமே உணவாக சாப்பிட்டு வருகிறாள். சொல்லப்போனால், கோழிக்கறிக்கு இவள் அடிமை ஆகிவிட்டாள். இவள் இப்படி ஆனதற்கு ஒரு கதை இருக்கிறது.


இவள் 2 வயதாக இருக்கும்போது, இவளது தாயார் அங்குள்ள அசைவ ஓட்டலுக்கு ஒருநாள் அழைத்துச் சென்றார். அங்கு ஸ்டேசி இர்வினின் தாயார் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டாள். குழந்தைக்கும் கொஞ்சம் ஊட்டி விட்டாள். அதன் ருசி ஸ்டேசிக்கு பிடித்துப் போய்விட்டது.

அப்புறம் என்ன... தினமும் அந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்லுமாறு தாயாரை ஸ்டேசி நச்சரிக்க தொடங்கினாள். வேறு எதையும் சாப்பிட மறுத்தாள். வேறு வழியின்றி தினமும் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ஸ்டேசிக்கு அவளது பெற்றோர் சிக்கன் வாங்கி கொடுத்தனர்.

பிறகு ஸ்டேசி பத்து வயதை தாண்டியதும் அவளே சிக்கன் வாங்கி வந்து வீட்டில் சமைக்க ஆரம்பித்தாள். குடும்ப வசதியை கருத்தில் கொண்டு அங்குள்ள தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றாள்.

கடந்த 15 ஆண்டுகளாக கோழிக்கறியை மட்டுமே உணவாக சாப்பிட்டு வந்த, இவள் சமீபத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டாள். மூச்சு விடவே மிகவும் கஷ்டப்பட்டாள். அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவள் சேர்க்கப்பட்டாள். அவளை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடலில் கொழுப்பு அதிகமாகி ரத்த ஓட்டகுழாய், மூச்சுக்குழாய் போன்றவற்றில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால்தான் அவள் மூச்சு விட முடியாமல் திணறினாள். தீவிர சிகிச்சை மூலம் அவளது உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் உணவில் அதிகளவில் காய்கறி, பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
Tags: ,

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!