நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாணவி கற்பழிக்கப்பட்ட அவலம்! (Video In)

பிரேசில் நாட்டில் இடம்பெறும் பிரபல நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியான Big Brother நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் பெண் ஒருவர் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்தப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்னொரு பங்கேற்பாளரான 31 வயதான Daniel Echaniz என்பவரே மேற்படி குற்றத்தைப் புரிந்தவராவார்.

குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்ட Rio de Janeiro என்ற ஸ்டூடியோவில் பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 23 வயதான Monique என்ற மாணவி மீதே கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்படி பாலியல் வன்முறைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த பெண்ணுடன் பலவந்தமாக செக்ஸ் வைத்துக் கொண்ட காட்சிகள் கமராவில் பதிவாகியுள்ளன. அளவுக்கதிகமான போதையில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. Big Brother நிகழ்ச்சி என்பது பிரேசில் மக்களால் அதிகம் ரசித்துப் பார்க்கப்படும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.



சராசரியாக இந்த நிகழ்ச்சியை 8 மில்லியன் பேர் பார்த்து இரசிக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பொலிஸார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறித்த நபருக்கு ஆறு ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!