திருப்பூர் அரசு மருத்துவமனையில், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை, 24 மணி நேரமும் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த, சுப்ரமணி மனைவி தெய்வாள். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் காலை,
இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பின்புறம் முதுகு பகுதியில், சதைப்பற்றுடன் மூன்றாவது கை போல் வளர்த்திருந்தது. அதைப்பார்த்து, மருத்துவக் குழுவினர் அதிசயித்தனர். இதையடுத்து, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை வைத்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கேசவன் கூறியதாவது: மூன்று கிலோ எடையுடன் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. குழந்தையின் உடல்நிலை படிப்படியாக முன்னேறி வருகிறது; நல்ல உடல் ஆரோக்கியம் வந்ததும், பெற்றோர் அனுமதியுடன், பின்பகுதியில் வளர்ந்துள்ள கை போன்ற சதை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும்; தண்டுவடம் சரிசெய்யப்படும். இவ்வாறு கேசவன் கூறினார்.