கடலூரில், நான்கு அறைகளுடன் வித்தியாசமாக காணப்பட்ட இளநீரை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். கடலூர் அடுத்த தாழங்குடாவைச் சேர்ந்தவர் முருகவேல்,50. கடலூர் காங்., அலுவலகம் எதிரில், இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று, விற்பனைக்காக ஒரு இளநீரை வெட்டிய போது, அதில், நான்கு அறைகள் காணப்பட்டன.
இதுகுறித்து, முருகவேல் கூறுகையில், "கடந்த 27 ஆண்டுகளாக, இளநீர் வியாபாரம் செய்து வருகிறேன். இதுபோன்ற வித்தியாசமான இளநீரை பார்த்ததில்லை' என்றார். வித்தியாசமாக காணப்படும் இளநீரை, கடைக்கு வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.