இருமல், தும்மல், விக்கல் மற்றும் கொட்டாவி இவை எல்லாம் திடீரென்று நிகழும் சில உடலியல் நிகழ்வுகள். இவற்றுக்கு அறிவியல்பூர்வமான காரணங்கள் உண்டு. இருமல் மற்றும் தும்மல் ஏற்படுவதற்கு காரணம் சுவாசக்குழாய்க்குள் இருக்கும் அழுக்கு, தூசு அல்லது சளி போன்றவற்றை நம் உடலானது வெளியில் உந்தித்தள்ளுவதே.
மாறாக, விக்கல் ஏற்படுவதற்கான காரணம் சற்று சுவாரசியமானது.
நம் மார்புக்கூட்டில் நுரையீரலுக்கு கீழே இருக்கும் `டயாபிரம்' என்னும் தோல் பகுதியானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, தவிர்க்க, `எபிக்லாட்டிஸ்' என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம். அதனால் ஏற்படும் ஒருவித `விக் விக்' எனும் சப்தத்தைத்தான் நாம் விக்கல் என்கிறோம்!
இப்படி, இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், நம்மில் பலர் கொட்டாவி விடும் ஒருவரைப்பார்த்தால், `பாவம் அவர் ரொம்ப சோர்வாக இருக்கிறார் போலிருக்கிறது' என்றே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப் பதே மெய் என்பதை கொஞ்சம் மாற்றி, கொட்டாவி பற்றி தீர ஆய்வு செய்து அறிந்துகொள்வதே மெய் என்கிறார்கள் கொட்டாவி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.
ஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்!
வெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது என்கிறார் ஆண்ட்ரூ.
ஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது.
இம்முடிவின் அடிப்படையில், வெப்பமான சீதோஷ்ண நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார் கள் ஆய்வாளர்கள்.
கொட்டாவி ஏன் ஏற்படுகிறது அல்லது கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஒரு டஜனுக்கும் மேலான ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உட்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.