"ஜிப்" உருவானது எப்படி? உங்களுக்கு தெரியுமா?

[caption id="attachment_5685" align="aligncenter" width="640" caption="IMAGE BY- wikipedia"]"ஜிப்" உருவானது எப்படி? உங்களுக்கு தெரியுமா?[/caption]

நம்மில் அன்று தொடக்கம் இன்று வரை பயன்படுத்தும் ஆடை வகைகளில் "சிப்" வைத்து தைத்திருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். பொதுவாக பாடசாலை செல்லும் குழந்தைகளின் புத்தகப்பை தொடக்கம் நாம் அணியும் உடைகள்வரை சிப் பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி இன்றும் ஏராளமான விடயங்களில் பயனாகிறது. ஆனால் அன்றாடம் நாம் ஏதோ ஒரு வகையில் கையாளும் இந்த சிப் எப்படி உருவானது என யாராவது சிந்தித்தது உண்டா? சரி அதற்குத்தான் நாம் உங்களுக்காக சிப்பின் சிறிய ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளுகிறோம்.
-----------


ஆரம்பத்தில் கொக்கி இல்லாத புதிய முறையை கண்டுபிடிக்க வேண்டும் என முயன்ற அமெரிக்க டிசைனர் வைட்கொம் ஜட்சன் 1893 இல் உருவாக்கியதுதான் இந்த ஜிப். இந்த மகத்தான கண்டுபிடிப்பை அந்த ஆண்டு நடந்த உலக கண்காட்சியில் விற்பனைக்கு வைத்தார். அனால்இ பார்வையிட்ட இரண்டு கோடி பேரில் இருபது பேர்கூட அதை வாங்கவில்லை. பின்னர் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து 1917 இல் நாம் தற்போது உபயோகபடுத்தும் ஜிப் வகைகள் தயாரிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அவை பரவலாக பழக்கத்துக்கு வந்தன.

Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!