வானவெளிக்கு செல்ல அதிசய `லிப்ட்’…..காணொளி

நிலவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்ல ஒரு நிறுவனம் முயற்சி செய்து வரும் வேளையில், ஜப்பானை சேர்ந்த ஒபயாஷி என்ற கட்டுமான நிறுவனம், வானவெளிக்கு செல்ல அதிசய `லிப்ட்’ அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.

‘இந்த உலகத்துக்கு வெளியே’ என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின்படி, நிலவுக்கு செல்லும் பாதையில் கால்வாசி தூரம்வரை, அதாவது தரையில் இருந்து 96 ஆயிரம் கி.மீற்றர் தூரம்வரை, அதாவது தரையில் இந்த லிப்ட் அமைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

இரும்பை விட 20 சதவீதம் அதிக வலுவுள்ள “நானோ டியூப்” தொழில்நுட்பம் மூலம் இந்த லிப்ட் அமைக்கப்படும் என்றும், 40 ஆண்டுகளுக்குள் இந்த அதிசய லிப்ட் கட்டி முடிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

ஒரே நேரத்தில் 30 பயணிகளை இந்த லிப்டில் ஏற்றிச் செல்வார்கள் என்றும், மணிக்கு 200 கி.மீற்றர் வேகத்தில் ஒரு வாரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது. அவர்கள் 36 ஆயிரம் கி.மீற்றரில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தில் இறக்கி விடப்பட்டு, வானவெளி அதிசய காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் மட்டுமே அதற்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!