உடலில் ரத்தம் துளி கூட இன்றி பிறந்த குழந்தை அதிசயமாக உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த விசித்திர சம்பவம் இங்கிலாந்து நாட்டில் மைட்ஸ்டோன் நகரில் நடந்தது.
இந்த அதிசய குழந்தையின் பெயர் ஆலிவர் மோர்கன். இவன் தாய் காத்தியின் வயிற்றில் 37 1/2 வாரக் குழந்தையாக இருக்கும் போது ஒருநாள் அதிகாலையில் அவர் எழுந்திருக்கும் போது படுக்கை முழுவதும் ரத்தம் படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது கருப்பையில் இருந்து செல்லும் குழாய் வெடித்து குழந்தையின் உடலில் உள்ள ரத்தம் முழுவதும் வெளியேறியிருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.
எனவே அவசர ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் ரத்தம் இன்றி இருந்ததால் குழந்தை மூச்சுபேச்சின்றி இருந்தது. உடனே ஆக்சிஜனை செலுத்தி உயிர்துடிப்பை சீராக்கி, சிறுக சிறுக ரத்தம் செலுத்தினார்கள்.
அதிகாலை 5.12 மணிக்கு பிறந்த குழந்தைக்கு 5.37 மணிக்கு தான் இருதயம் துடிக்க ஆரம்பித்தது. இவ்வாறாக 25 நிமிட நேரம் இடைவிடாமல் டாக்டர்கள் அயராத முயற்சி செய்து குழந்தையை உயிர் பிழைக்க வைத்தனர். இருதய துடிப்பு ஏற்பட்டதை அறிந்த பிறகே டாக்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர். தற்போது ஆலிவருக்கு 1 1/4 வயதாகிறது. இவனுக்கு 7 வயதில் ஒரு சகோதரன் இருக்கிறான்.
SOURCE:-http://www.telegraph.co.uk/