மனித தோலில் இருந்து மூளை செல்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

மனிதன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிபடுத்துவது மிகவும் கடினமாகும். ஆனால் புதிய கண்டுபிடிப்பு ஒன்று இதற்கு தீர்வு ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்காமல் இருந்தனர்.

ஆனால் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.

எலியில் இருந்து இது போன்ற மூளை செல்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். இதே போல மனித மூளை செல்களையும் உருவாக்க முடியும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

இதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!