ஒரு வயது குழந்தை பாம்பை பிடித்து கடித்த சம்பவம் இஸ்ரேலின் வடக்கே ஜெருசிலேம் அருகே அரேபியர்கள் அதிகம் வசிக்கும் நகரில் நடந்தது. அந்த குழந்தையின் பெயர் இமாத் அலீயன். பிறந்து 13 மாதங்களே ஆன இந்த குழந்தைக்கு 6 சிறிய பற்கள் அரும்பி இருக்கின்றன.
இந்த குழந்தையும், தாயும் வீட்டில் இருந்த போது ஒரு பாம்பு புகுந்தது. குழந்தையின் அருகில் சென்று அது சுருண்டு கிடந்தது. பொதுவாக குழந்தைகள் தங்களின் கையில் பட்ட பொருட்களை எடுத்து வாயில் வைத்து கடித்து விடும். அதுபோலவே இந்த குழந்தையும் எதிர்பாராதவிதமாக கையில் சிக்கிய பாம்பை பிடித்து அதன் தலைப்பகுதியை கடித்தது.
அருகில் இருந்த தாய் இதை பார்த்து பதறிப்போய் அலறினார். இந்த அபயக்குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுமார் 1 அடி நீளமுள்ள பாம்பை குழந்தையின் பிடியில் இருந்து எடுத்தனர். அதன் பின்னரே குழந்தை கதறி அழுதது.