தாதா வேடத்தில் மீண்டும் கலக்குகிறார் அஜீத் !

பில்லாவை தொடர்ந்து மீண்டும் தாதா வேடத்தில் நடிக்கிறார் அஜீத். விஷ்ணுவர்த்தன் இயக்கிய ‘பில்லா’ படத்தில் அஜீத்குமார் நடித்தார். கடத்தல் மன்னன் மற்றும் தாதாவாக  நடித்த அப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து பில்லா இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தை சக்ரி இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.  இதையடுத்து அஜீத் நடிக்கும் புதியபடம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.  இந்நிலையில் இயக்குனர் விஷ்ணுவர்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘பாஞ்ஜா’ இன்று ரிலீஸ் ஆகிறது. இப்படத்தையடுத்து தல (அஜீத்) படம் இயக்குகிறேன். பில்லாவுக்கு பிறகு அஜீத்துடன் இணைவது அவரது  ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் ஷூட்டிங் வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. தெலுங்கில் இயக்கிய ‘பாஞ்ஜா’ படத்தையே அஜீத் நடிக்க தமிழில்  ரீமேக் செய்ய உள்ளார் விஷ்ணுவர்தன். இதுவும் தாதா கதை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!