இங்கிலாந்து இளவரசர் ஹாரி அமெரிக்காவில் பெண்களுடன் லூட்டி!

ஹெலிகாப்டர் பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருக்கும் இங்கிலாந்து இளவரசர் ஹாரி, கடந்த வார கடைசியில் தோழியுடன் ஜாலியாக சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லசின் 2-வது மகன் ஹாரி (27). ராணுவத்தில் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது கேப்டன் அந்தஸ்தில் இருக்கிறார். 2007-08ல் நடந்த ஆப்கன் போரில் ஒரு வீரராக பங்கேற்றார். மீடியாக்கள் பரபரப்பாக்கியதால், ஆப்கன் டூட்டியில் இருந்து அவர் விலக்கிக் கொள்ளப்பட்டார். ஆனால், ஆப்கன் போரில் பணியாற்றுவதற்கு ஹாரி தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக அப்பாச்சி ஹெலிகாப்டர் ஓட்ட தீவிர பயிற்சி பெற்று வருகிறார். ஆப்கன் போன்ற மலை அமைப்புகள் அமெரிக்காவில் இருப்பதால் அங்கு பயிற்சி பெறுகிறார்.

அரிசோனா மாநிலத்துக்கு கடந்த மாதம் வந்த ஹாரி, பயிற்சி போக மீதி நேரங்களில் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். வாரக் கடைசியில் நண்பர்களுடன் உல்லாச சுற்றுலா போகிறார். கடந்த வெள்ளிக்கிழமை ஹார்லி டேவிட்சன் மோட்டார்பைக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அண்டை மாநிலமான நெவாடாவுக்கு வந்தார்.   பல கிளப்களுக்கு சென்று மது விருந்துகளிலும் கலந்துகொண்டார். பெண் தோழி ஒருவருடன் அவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் விடுதியில் ஆடிப் பாடி மகிழ்ந்ததாகவும் அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பெண் யார் என்பது பற்றி தெரியவில்லை என்றும் கூறியுள்ளன.
Tags:

இச்செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால்..

பெறுமதி மிக்க புதியஉலகம் வாசகரே.. இச்சசெய்தி உங்களுக்கு பிடித்திருப்பின் முகப்புத்தகம் மூலம் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி..!